ரசப் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மிளகாய் வற்றல் – 200 கிராம்
2. தனியா – 500 கிராம்
3. மிளகு – 200 கிராம்
4. சீரகம் -200 கிராம்
5. துவரம் பருப்பு -250 கிராம்
6. விரளி மஞ்சள் -100கிராம்
7. காய்ந்த கறிவேப்பிலை - தேவையான அளவு
8. கடுகு-2 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. கொடுத்திருக்கும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து நல்ல வெய்யிலில் காயவைக்கவும்.
2. ஒரு வாணலியில் காய்ந்த பொருட்களைப் போட்டு இலேசாக வறுத்து எடுக்கவும்.
3. மாவரைக்குமிடத்தில் கொடுத்து சற்று கரகரப்பாக அரைத்து ஆற வைத்து எடுத்துக் காற்று புகாத புட்டிகளில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு
தேவையான போது தேவையான ரசப்பொடியைத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைத்து ரசமாகப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.