பருப்பு ரசப்பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 100 கிராம்
2. மிளகாய் வற்றல் - 25 கிராம்
3. மல்லி - 100 கிராம்
4. சீரகம் - 100 கிராம்
5. மிளகு - 1 மேஜைக் கரண்டி
6. கடுகு - 2 தேக்கரண்டி
7. வெந்தயம் - 2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
1. அனைத்து பொருட்களையும் சூரிய ஒளியில் காய வைத்து தனித்தனியே அல்லது ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும்.
2. வறுத்தவற்றைக் கரகரப்பாகப் பொடித்து வைக்கவும்.
3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு
தேவையான போது தேவையான ரசப்பொடியைத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைத்து பருப்பு ரசமாகப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.