பருப்புப்பொடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பொட்டுக் கடலை - 150 கிராம்
2. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
3. பூண்டு - 1 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
5. நெய் - 2 தேக்கரண்டி
6. கல் உப்பு - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் பொட்டுக் கடலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சில நிமிடங்கள் வறுத்து ஆற வைக்கவும்.
2. ஆறிய பின்பு அததனுடன் உப்பு சேர்த்து நன்கு மாவு போல் பொடிக்கவும்.
3. இந்த மாவைச் சல்லடை கொண்டு சலித்து தேங்கியவற்றை மீண்டும் பொடித்துச் சலிக்கவும்.
4. கடைசியாகத் தேங்கியிருப்பதுடன் தேங்காய்த்துருவல், பூண்டு சேர்த்துப் பொடிக்கவும்.
5. அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் காற்று புகாத பாட்டிலில் அடைத்துச் சேமித்து வைக்கவும்.
குறிப்பு
பருப்புப்பொடியைச் சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.