மாவத்தல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 5 எண்ணம்
2. உப்பு - 125 கிராம்.
செய்முறை:
1. மாங்காய்களை நன்கு கழுவி ஈரம் போகத் துடைக்கவும்.
2. மாங்காய்கள் அனைத்தையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொட்டைகளை நீக்கி விடவும்.
3. ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் வெட்டிய மாங்காய்த் துண்டுகளைப் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற விடவும்.
4. இடை இடையே நன்கு குலுக்கி விடவும். சிறிது தண்ணீர் விடும்.
5. மறு நாள் மாங்காய் துண்டுகளை எடுத்து வெயிலில் காய வைக்கவும்.
6. மாங்காய் ஊறிய உப்புத் தண்ணீரை வீணாக்காமல் மூடி வைக்கவும்.
7. மாங்காய்த் துண்டுகள் காய்ந்தவுடன் அதை மீண்டும் உப்புத் தண்ணீரில் போடவும்.
8. இப்படியே உப்புத் தண்ணீர் வற்றும் வரை மாங்காய்த் துண்டுகளை வெயிலில் காயவைக்கவும்.
9. நன்கு காய்ந்தவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.