கறிவேப்பிலைப் பொடி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை - 1 கப்
2. மிளகு - 10 எண்ணம்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
5. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெறும் கடாயில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
2. அதே கடாயில், கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வறுக்கவும். அது ஆறியதும், 'மொறுமொறு'வென ஆகிவிடும்.
3. பிறகு, அனைத்தையும் ஒன்றாக்கி உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் இந்தப் பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.