பருப்புப் பொடி
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 200 மில்லி
2. கொள்ளு - ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு
3. மிளகு - 1 சிறிய மேசைக் கரண்டி
4. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
5. கட்டிபெருங்காயம் - சிறிய துண்டு
6. கறிவேப்பில்லை காய்ந்தது - 10 இலைகள்
7. சுக்கு - சிறிய துண்டு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1.முதலில் ஒரு வாணலியில் தனியாக கொள்ளுவை சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அடுத்து துவரம்பருப்பை தனியாக சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
3. பின்னர் மிளகு,மிளகாய்வற்றல்,பெருங்காயம்,சுக்கு,கறிவேப்பில்லையை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
4. நன்றாக அனைத்தும் ஆறியபின் மிக்ஸியில் போட்டு, அதனுடன் உப்புசேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.