மோர் மிளகாய் வற்றல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மிளகாய் - 100 கிராம்
2. கெட்டித் தயிர் - 1 கப்
3. உப்பு - 2 தேக்கரண்டி.
செய்முறை:
1. பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, நுனியில் சற்று கீறிவிடவும். காம்பு மிகப் பெரிதாக இருந்தால், சிறிது விட்டு விட்டு, மீதியை நீக்கி வைக்கவும்.
2. தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.
3. பெரிய பாத்திரத்தில் மிளகாயைப் போட்டு, மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றி வைக்கவும்.
4. மூன்று நாட்கள் ஊறிய பிறகு, தயிரிலிருந்து மிளகாயை சற்றே பிழிந்தாற்போல் எடுத்து , ஒரு தட்டில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.
5. தயிர் கலவையும் வெயிலிலேயே வைக்கவும்.
6. மாலை ஆனவுடன் மிளகாயைத் திரும்பவும் தயிருடன் கலந்துவிடவும்.
7. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிளகாயை இப்படியேக் காய வைக்கவும்.
8. தொடர்ந்து இப்படிச் செய்யும் பொழுது மிளகாயும், தயிரும் காய்ந்துவிடும்.
9. காய்ந்த மிளகாயைக் காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.