கத்திரிக்காய் வற்றல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 1/4 கிலோ
2. புளி - நெல்லிக்காய் அளவு
3. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
4. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. புளியைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்துப் புளித்தண்ணீராகக் கரைத்து வைக்கவும்.
3. காய வைத்த கத்தரிக்காய்த் துண்டுகளுடன் புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்துச் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
4. வெந்ததும் நீரை வடித்துத் திரும்பவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெயிலில் நன்கு காயவைத்துப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: கத்தரிக்காய் வற்றலைக் கொண்டு வற்றல் குழம்பு செய்தால், மிகவும் ருசியாக இருக்கும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.