கொத்தவரங்காய் வற்றல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கொத்தவரங்காய் - 1/2 கிலோ
2. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
3. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. நல்ல கொத்தவரங்காயாக வாங்கி வந்து, அடி, நுனி நீக்கிவிட்டு அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
2. கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும்.
3. நன்கு காய்ந்த பின்பு எடுத்துப் பாதுகாப்பாக வைக்கவும்.
குறிப்பு:
1. கொத்தவரங்காய் வற்றலை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொண்டு ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.
2. வற்றல் குழம்புக்கும் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.