பூண்டுப் பொடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பூண்டு - 100 கிராம்
2. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
3. உளுத்தம்பருப்பு - 4 மேசைக்கரண்டி
4. எண்ணெய் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பூண்டைத் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பூண்டு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பை கருகாமல் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3. வறுத்தது ஆறியதும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
4. அரைத்த பொடியினை ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைத்துத் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.