வெண்டைக்காய் வற்றல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 1/2 கிலோ (பிஞ்சாக இருக்க வேண்டும்)
2. தயிர் - 1/2 கப்
3. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெண்டைக்காயை ஒரு அங்குல அளவுத் துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைக்கவும்.
2. மாலையில் தயிரில் உப்பு சேர்த்து, இந்த வெண்டைக்காய்களையும் போட்டுக் கலந்து நான்கு நாட்கள் ஊறவைக்கவும்.
3. பின்னர் வெயிலில் நன்கு காயவிட்டு எடுத்து வைக்கவும்.
குறிப்பு:மதிய உணவு வேளைகளில், தயிர், மோர் சாதத்திற்குப் பொரித்துச் சாப்பிடலாம். வற்றல் குழம்புக்கும் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.