இட்லி மிளகாய்ப் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மிளகாய் வற்றல் - 1 கப்
2. உளுத்தம்பருப்பு - 1 கப்
3. கடலைப்பருப்பு - 1 கப்
4. வெள்ளை எள்ளு - 2 கைப்பிடி
5. புளி - 1 நெல்லிக்காய் அளவு
6. உப்பு - 1 மேசைக்கரண்டி
7. பெருங்காயம் - 1 பெரிய துண்டு
8. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு வாணலியில் நல்லெண்ணையை விட்டுப் பெருங்காயத்தையும் புளியையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொண்ட பிறகு, மிளகாயைக் கருகாமல் வறுத்து வைக்கவும்.
2. உளுத்தம் பருப்பையும் கடலைப் பருப்பையும் வறுத்துத் தனியாக வைக்கவும்.
3. வெள்ளை எள்ளையும் வறுத்து வைக்கவும்.
4. வறுத்த வெள்ளெள்ளைத் தவிர்த்து, வறுத்து வைத்த அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
5. அதனுடன் கடைசியாக வறுத்த எள்ளைச் சேர்த்து மூன்று நிமிடம் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
குறிப்பு: இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் கலந்து இப்பொடியைத் தொட்டுச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.