சட்னி பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் - 2 கப்
2. பச்சை மிளகாய் - 8 எண்ணம்
3. பொட்டுக் கடலை - 25 கிராம்
4. புளி - பாக்களவு
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
7. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
8. கருவேப்பிலை - சிறிது
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. நல்லெண்ணையில் கடுகு உளுத்தம் பருப்பைத் தாளித்து எடுத்துக் கொண்ட பின் பெருங்காயம், புளி, கருவேப்பிலையை வறுத்துக் கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை வதக்கிக் கொண்டு, அது நன்றாக மொறுமொறுப்பாக ஆன பின்னால் பொட்டுக்கடலையையும் தேங்காயையும் போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
3. கடுகு உளுத்தம் பருப்பைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் மெலிதாக அரைத்து எடுக்கவும்.
4. கடைசியில் கடுகு உளுத்தம் பருப்பைக் கலந்து ஜாடியில் வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு:இட்லி தோசைக்கு எண்ணெய் சேர்த்துத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.