தேங்காய் மிளகாய்ப் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் (துருவியது) - 2 கப்
2. சிவப்பு மிளகாய் வற்றல் - 1 கப்
3. உளுத்தம் பருப்பு - 1 கப்
4. கடலைப் பருப்பு - 1/2 கப்
5. பெருங்காயம் - 1 பெரிய துண்டு
6. புளி - 1 சிறு எலுமிச்சம் பழ அளவு
7. உப்பு - தேவையான அளவு
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. நல்லெண்ணையில் பெருங்காயத்தையும் புளியையும் வறுத்து எடுத்து விட்டு அதே சட்டியில் தேங்காய், மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகவேப் போட்டு சற்று கவனத்தோடு சிவக்க வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
2. மிக்சியில் எல்லாவற்றையும் அரைத்துச் சுத்தமான ஜாடியில் பத்திரமாக எடுத்து வைக்கவும்.
குறிப்பு:
1. இட்லி தோசைக்கு இட்லி மிளகாய்ப் பொடி போலவே உபயோகிக்கலாம். சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.
2. தேங்காய் சேர்ப்பதால் வெகுநாள் வைத்தால் சிக்கு வாசனை வந்து விடும். மூன்று வாரம் வரை தாங்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.