சாம்பார் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மிளகாய் வற்றல் - 500 கிராம்
2. மல்லி - 500 கிராம்
3. துவரம் பருப்பு - 150 கிராம்
4. கடலைப் பருப்பு - 50 கிராம்
5. உளுத்தம் பருப்பு - 50 கிராம்
6. வெந்தயம் - 50 கிராம்
7. சீரகம் - 50 கிராம்
8. மிளகு - 25 கிராம்
9. விரலி மஞ்சள் - 50 கிராம்
10. காய்ந்த கறிவேப்பிலை - 1 கப்
11. அரிசி - 25 கிராம்
செய்முறை:
1. கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் வெய்யிலில் நன்றாகக் காய வைத்து, மிக்சியிலோ அல்லது இயந்திரத்திலோ கொடுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.