தேங்காய்ப் பொடி
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. முற்றிய தேங்காய் - 1
2. க.பருப்பு - 50 மில்லி
3. உ.பருப்பு - 50 மில்லி
4. மிளகாய் வற்றல் - 15 எண்ணம்
5. கட்டிப் பெருங்காயம் - 1 துண்டு
6. புளி - நெல்லிக்காய் அளவு
7. கறிவேப்பிலை - 10 இலைகள்
8. உப்பு - தேவையான அளவு
9. தேங்காய் எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
செய்முறை:
1.முதலில் தேங்காயை பூப்பூவாக துருவிக கொள்ளவும்.
2. பின்னர் சிறிது எண்ணெய்விட்டு வரமிளகாய்,பெருங்காயத்தை வறுத்துக் கொள்ளவும். பின்னர் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொரித்துக் கொள்ளவும்.
3. மீதமுள்ள இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய்யில் துருவிய தேங்காயைப் போட்டு, நன்றாக வாசனை வரும்வரை சிவக்க வறுக்கவும்.
4. மிக்ஸியில் முதலில் பருப்பு, மிளகாய், பெருங்காயம், புளி, கறிவேப்பிலை ஆகியவற்றை கரகரப்பாக வறுத்துக் கொள்ளவும்.
5. கடைசியில் தேங்காயைச் சேர்த்து கரகர என்று அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.