பருப்புப் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 1 கப்
2. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
3. மிளகு - 1தேக்கரண்டி
4. உப்பு - 1 தேக்கரண்டி
5. புளி - சிறிது
6. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. வாணலியை அடுப்பில் ஏற்றி நல்லெண்ணையை விட்டு அதில் பெருங்காயம், புளி இரண்டையும் தனித்தனியே ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும்.
2. மீதமிருக்கும் எண்ணையில் துவரம் பருப்பு, மிளகாய், மிளகு இவற்றைப் போட்டு மிதமான நெருப்பில் சிவக்க வறுத்து, நன்றாக ஆற வைக்கவும்.
3.ஆறிய பின்னர் மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
4. காற்றுப் புகாத ஜாடியில் வைத்து ஈரக் கைகளால் தொடாமல் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: வடித்த சாதத்தில் இந்தப் பொடி போட்டு, நெய் அல்லது நல்லெண்ணைய் சேர்த்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.