எள்ளுப் பொடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளெள்ளு - 1 கப்
2. உளுத்தம் பருப்பு - 1 கப்
3. சிவப்பு மிளகாய் - 15 எண்ணம்
4. மிளகு - 12 எண்ணம்
5. புளி - 1 எலுமிச்சம் பழ அளவு
6. பெருங்காயம் - 1 சிறு துண்டு
7. நல்லெண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. எள்ளை வெறும் இலுப்பச் சட்டியில் சிவக்க வறுத்த பின்னர், எண்ணெய் விட்டு பெருங்காயத்தையும் புளியையும் வறுக்கவும்.
2. மிளகாய், மிளகு, உளுத்தம்பருப்பை ஒன்றாகப் போட்டு, உளுத்தம் பருப்பு சிவக்க வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
3. வறுத்த எள்ளைத் தவிர, மற்ற எல்லாப் பொருட்களையும் மிக்சியில் இட்டு மிருதுவாக அரைக்கவும்.
4. கடைசியில் எள்ளைப் போட்டு 2 நிமிடம் சுற்றி எடுக்கவும்.
5. காற்றுப் புகாத ஜாடியில் வைத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தல்:
உதிராக வடித்த சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சற்று ஆறிய பின்னர், தேவையான அளவு எள்ளுப்பொடியைச் சேர்த்துக் கலக்கிச் சாப்பிடலாம். (இதற்குப் பொரித்த கூட்டுடன், பொரித்த வடாமும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.