சுக்கு மல்லிப் பொடி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சுக்கு - 1/4 கோப்பை
2. மிளகு - 1/8 கோப்பை
3. கொத்து மல்லி விதைகள் - 1/2 கோப்பை
4. ஏலக்காய் - 15 எண்ணம்
செய்முறை:
1. சுக்கைச் சுத்தம் செய்து உரலில் இட்டு நசுக்கி வைக்கவும்.
2. கொத்து மல்லி விதைகளைச் சுத்தம் செய்து வைக்கவும்.
3. சுக்கு, மிளகு, கொத்து மல்லி விதைகள், ஏலக்காய் என்று அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.
4. பொடியில் ஈரம் சேர்ந்து விடாமல், கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.
குறிப்பு:
இப்பொடியினை ஆறு மாதங்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.