கறிவேப்பிலை பொடி
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை - 2 கப்
2. உளுத்தம் பருப்பு - 50 மில்லி
3. மிளகு - 10 எண்ணம்
4. சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி
5. வரமிளகாய் - 10 எண்ணம்
6. பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
7. புளி - நெல்லிகாய் அளவு
8. இஞ்சி - ஒரு துண்டு
9. உப்பு தேவையான அளவு
10. கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி
செய்முறை:
1.முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸியில் போட்டு, அதன் பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.