இட்லிப் பொடி
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. கடலைப் பருப்பு - 100 மில்லி கிராம்
2. உளுத்தம் பருப்பு - 100 மில்லி கிராம்
3. கருப்பு எள் - 50 மில்லி கிராம்
4. மிளகாய் வற்றல் - 30 எண்ணம்
5. பெருங்காயம் - 15 கிராம்
6. வெல்லம் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. தேங்காய் எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
1.முதலில் எள்ளைத் தண்ணீரில் ஊற வைத்து, கல் நீக்கி அரித்து வைக்கவும். கருப்புத் தோல் நீங்க தேய்த்து பின்னர் காய வைக்கவும்.
2. எள்ளை வாணலியில் எண்ணெய் விடாமல் வாசனை வரும் வரை வறுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் சிவக்க வறுக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் அரைக்கவும்.
குறிப்பு: எள் வாசனை பிடிக்காதவர்கள் ஐந்து மேசைக் கரண்டி தேங்காய்த் துருவலை வறுத்து அரைப்பதுடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.