எள் மிளகாய்ப் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
2. கடுகு – 1 தேக்கரண்டி
3. உளுத்தம்பருப்பு – 100 கிராம்
4. கடலைப்பருப்பு – 100 கிராம்
5. பெருங்காயம் – சிறிது
6. எள் – 75 கிராம்
7. உப்பு – தேவையான அளவு
8. நல்லெண்ணெய் - சிறிது.
செய்முறை:
1. உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
2. எள்ளை ஊற வைத்துத் தோல் போக தேய்த்து வெறும் வாணலியில் வறுக்கவும்.
3. வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து மொறுமொறுப்பாக அரைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.