கருவேப்பிலை பொடி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கருவேப்பிலை - 3 கப்
2. மிளகு - 4 தேக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
4. துவரம் பருப்பு - 5 தேக்கரண்டி
5. மல்லி - 50 கிராம்
6. பெருங்காயம் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியில் மிதமான நெருப்பில் கருவேப்பிலை, மிளகு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, மல்லி, பெருங்காயம், உப்பு என்று ஒவ்வொன்றையும் உலர் வறுவலாக ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும்.
2. வறுத்த அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும் .
குறிப்பு
இட்லி, தோசை போன்றவைகளுக்கு நல்லெண்ணெய் சேர்த்துத் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.