சிவப்புத் தண்டுக் கீரைப் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சிவப்புத் தண்டுக் கீரை - 2 கட்டு
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. தேங்காய் - 2 துண்டு
4. பூண்டு - 2 பல்
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். எண்ணெயில் வதக்கவும்.
2. கீரையைச் சுத்தம் செய்து, ஆய்ந்து நன்றாகத் தண்ணீரில் கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. வதங்கி இருக்கும் வெங்காயத்துடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைச் சேர்த்து வதக்கவும்.
5. கீரை சுருண்டு வந்த பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
6. தேங்காய், பூண்டு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்.
7. கீரை வெந்த பின்பு அதோடு, அரைத்த கலவையைச் சேர்த்து கலந்து சிறிது நேரத்தில் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.