வாழைப்பூ முருங்கைக்கீரைப் பொரியல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ - 1 கோப்பை
2. முருங்கைக்கீரை - 1/2 கோப்பை
3. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 3 கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
3. அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
4. தாளிசத்தில் கருவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
5. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. அதனுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூவைத் தண்ணீரை வடித்து விட்டு அதில் போடவும்.
7. அதன் பிறகு முருங்கைக்கீரையை அதில் போடவும்.
8. எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வதக்கவும்.
9. பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கால் கரண்டி மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
10. வாழைப்பூ நன்கு வெந்து தண்ணீர் வற்றிய உடன், தேங்காய்த் துருவலைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கிப் பிறகு பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.