முருங்கைக் கீரைப் பொறியல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்கீரை - 2 கப்
2. சிறிய வெங்காயம் - 4 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
4. தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
5. பூண்டு - 3 பல்
6. புளி - நெல்லிக்காய் அளவு
7. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய்- தேவையான அளவு
தாளிக்க
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. உளுந்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
12. வெந்தயம் - 1 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
11. முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காய் துருவல், வத்தல், புளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கீரையை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
5. அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வதக்கவும்.
6. சிறிது நேரம் கழித்து, ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காய், வற்றல், உப்பு போன்றவைகளின் கலவையைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
8. தாளிசத்தைப் பொரியலுடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.