பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பொன்னாங்கண்ணிக் கீரை - 2 கப்
2. பாசிப்பருப்பு - 1/2 கப்
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
5. மல்லி - 1/2 மேசைக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
8. தக்காளி - 1 எண்ணம்
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. அடி கனமான பாத்திரத்தில் பொன்னாங்கண்ணிக் கீரையோடு மஞ்சள் தூள், பாசிப்பருப்பு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
2. ஒரு வாணலியில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு, சீரகம் எல்லாவற்றையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
3. வறுத்த பொருட்களை கரகரப்பாகப் பொடிக்கவும்.
4. வேகவைத்த கீரையை லேசாக மசித்து, அத்துடன் பொடித்த பொடியைச் சேர்க்கவும்.
5. பின் அதில் உப்பு, தக்காளி சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.