ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய்- 10 எண்ணம்
2. தக்காளி - 2 எண்ணம்
3. புளி - சிறு நெல்லிக்காய் அளவு
4. பூண்டு - 10 பல்
5. தேங்காய் - 1/4 மூடி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி ஸ்பூன்
9. எண்ணெய்- 100 மிலி
வறுக்க
10. பட்டை- சிறு துண்டு
11. மிளகு -10 எண்ணம்
12. சீரகம் - 1/4 தேக்கரண்டி
13. மல்லி - 2 தேக்கரண்டி
14. நிலக்கடலை - 50 கிராம்
தாளிக்க
15. கடுகு - 1/4 தேக்கரண்டி
16. உளுந்து - 1/4 தேக்கரண்டி
17. கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
18. சீரகம் - 1/4 தேக்கரண்டி
19. பூடு - 3 பற்கள்
20. கறிவேப்பிலை - சிறிது
21. வெங்காயம் - 50 கிராம்.
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் விடாமல் வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.
3. நிலக்கடலையை தனியாக வறுத்துத் தோலுரித்துக் கொள்ளவும்.
4. வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
5. கத்திரிக்காயின் மேல் பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை கீறிக் கொள்ளவும். காம்பை நீக்க வேண்டாம்.
6. மசாலா கலவையை கத்திரிக்காயில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.
7. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும்.
8. வெங்காம் நன்கு நிறம் மாறியதும், கத்திரிக்காய்க் கலவையை சேர்க்கவும்.
9. அத்துடன் தக்காளி மற்றும் புளியைச் சேர்த்து மூடி வைக்கவும். அடிபிடிக்காதவாறு அவ்வப்போது கிளறவும்.
10. மசாலாவில் நீர் வற்றி, கத்திரிக்காய் நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வெளியே வரும் பக்குவத்தில் இறக்கிவிடவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.