வெண்டைக்காய் புளிகறி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 100 கிராம்
2. புளி - ஒரு நெல்லிகாய் அளவு
3. தக்காளி - 2 எண்ணம்
4. வெங்காயம் - 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
6. பூடு - ஒன்று
7. கறிவேப்பிலை - சிறிது
8. கடுகு, உளுந்து, கடலைபருப்பு-1 ஸ்பூன்
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
11. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
12. சாம்பார் தூள் - 2 கரண்டி
13. உப்பு - தேவையான அளவு
14. எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை:
1. வெண்டைக்காயைச் சுத்தம் செய்து நீரைத் துடைத்து விட்டு இரண்டு அங்குலம் அளவுக்கு வெட்டவும்.
2. நறுக்கிய வெண்டைக்காயை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து, கடலைபருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
4. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உரித்த பூடுகள் சேர்த்து வதக்கவும்.
5. பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
6. தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
7. குழைந்ததும் வதக்கிய வெண்டிக்காயை சேர்க்கவும்.
8. அதன் பின்னர் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.
9. மசாலா ஒன்றோடொன்று சேர்ந்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து வேகவிடவும்.
10. மசாலா நீர் பாதியாக வற்றிச் சுருண்டதும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.