வெண்டைக்காய் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் – 250 கிராம்
2. பச்சை மிளகாய் – 6 எண்ணம்
3. சின்ன வெங்காயம் – 6 எண்ணம்
4. துவரம் பருப்பு – 50 கிராம்
5. சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
6. மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
7. புளி – சிறிய எலுமிச்சையளவு
8. கடுகு – 1/2 தேக்கரண்டி
9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
10. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
13. கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
1. புளியைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
2. வெண்டைக்காயை சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.
4. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு,சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய் போட்டு, தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி வதக்கவும்.
7. வெண்டைக்காயிலுள்ள பிசு பிசுப்பு நீங்கி, அது வேகும் வரை வதக்க வேண்டும்.
8. பின் அதில் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பின்னர் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.