காலிபிளவர் பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் - 1 எண்ணம்
2. கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
4. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
5. இஞ்சி - சிறு துண்டு
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
8. எண்ணை - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. காலிபிளவரிலிருந்து பூக்களைத் தனித்தனியாக பிரித்தெடுக்கவும்.
2. இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் காலிபிளவர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சில வினாடிகள் கொதிக்க விட்டு, காலிபிளவரை எடுத்துத் தனியாக வைக்கவும்.
4. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடலைப்பருப்பு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்தெடுக்கவும்.
5. அது ஆறியதும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
7. பின்னர் அதனுடன் காலிபிளவரைச் சேர்த்து, சிறிது உப்பு போட்டுக் கிளறி, மூடி வைத்து, மிதமான நெருப்பில் சில நிமிடங்கள் வேக விடவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும்.
8. கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.