வாழைக்காய் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வாழைக்காய் - 2 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
3. மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
4. சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய்- 4 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது..
செய்முறை:
1. வாழைக்காயை தோல் நீக்கி வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் தேவையானஅளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். கொதிக்கத் தொடங்கும் போது, அதில் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து வேக விடவும்.
3. வாழைக்காய்த் துண்டுகள் ஓரளவு வெந்ததும், நீரை வடித்து விட்டுத் தனியாக வைக்கவும்.
4. வேகவைத்த வாழைக்காய்த் துண்டுகளுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் தெளித்துப் பிரட்டி வைக்கவும்.
5. ஒரு வாணலியில் என்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை போட்டு, பின் அதில் பிரட்டிய வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து சிறிது நேரம் கிளறி வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.