காளான் வறுவல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பட்டன் காளான் – 15 எண்ணம்
2. கோபி மஞ்சூரியன் பவுடர் – 2 மேசைக்கரண்டி
3. சோள மாவு - 1 மேசைக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. எண்ணெய் – தேவையான அளவு
6. மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
செய்முறை:
1. பட்டன் காளானைச் சுத்தமாகக் கழுவி துண்டாக நறுக்கி கொதிக்கும் நீரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் போட்டு வேக விட்டு எடுத்து தண்ணீரை ஒட்ட வடித்துக் கொள்ளவும்.
2. கோபி மஞ்சூரியன் பவுடர், சோள மாவு போட்டு சூடான எண்ணெய் 1 மேசைக்கரண்டி அதில் ஊற்றிப் பிரட்டி 10 நிமிடம் காளானை ஊற விடவும்.
3. இரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசறி வைத்த காளானைப் போட்டு பொரித்து எடுக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.