வாழைப்பூ மசியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ- 1 எண்ணம்
2. துவரம்பருப்பு – 1/2 கப்
3. உப்பு- தேவையான அளவு
4. புளி- எலுமிச்சை அளவு
5. எண்ணெய்- 2 தேக்கரண்டி
6. கடுகு- 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல்- 3 எண்ணம்
9. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
10. கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை:
1. துவரம்பருப்பை வேகவைத்துத் தண்ணீரை வடித்து வைக்கவும்.
2. புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
3. வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி, அதை மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வாழைப்பூவை வேக வைக்கவும்.
5. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காயந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை பச்சைமிளகாய், மிளகாய் வற்றலைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. வேக வைத்த வாழைப்பூவைத் தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும்.
7. வெந்து கொண்டிருக்கும் வாழைப்பூவுடன் கெட்டியான புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்க விடவும், அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
8. குழைவாக வேக வைத்த துவரம்பருப்பை வாழைப்பூவுடன் சேர்த்து கெட்டியாக வரும் பதத்தில் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.