வெண்டைக்காய் வறுவல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 200 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம் (
3. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
4. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு..
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
2. அதில் வட்டமாக நறுக்கிய வெண்டைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
3. பின்பு உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
4. காய் நன்கு வதங்கியதும், இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.