மாங்காய் பச்சடி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (துண்டுகள்) - 3 கப்
2. வெல்லம் - 1 கப்
3. மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
4. மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி
5. எண்ணெய்-1 தேக்கரண்டி
6. கடுகு- 1/4 தேக்கரண்டி
7. உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. மாங்காய்த் துண்டுகளுடன், தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெல்லம், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
3. வெல்லம் கெட்டியானதும் வேகவைத்த மாங்காய் சேர்த்துக் கிளறவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுச் சூடானதும், அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் மாங்காய்க் கலவையுடன் சேர்த்துக் கிளறி விட்டுப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.