உருளைக்கிழங்கு வறுவல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 100 கிராம்
2. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. எண்ணெய் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு
6. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. முதலில் உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கியோ அல்லது தோலுடனோ சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
3. பின்னர் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
4. அதனுடன், மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான நெருப்பில் வதக்கவும்.
5. கிழங்கு வெந்தவுடன் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.