அவரைக்காய் கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவரைக்காய் - 150 கிராம்
2. பயத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
3. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
4. ரசப்பொடி - 1/2 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
7. கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. வெங்காயம் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
9. பெருங்காயம் - சிறிது
10. கறிவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. அவரைக்காயைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2. நறுக்கிய அவரைக்காய்த் துண்டுகளுடன் பயத்தம் பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைத்துத் தண்ணீரை வடித்து விடவும்.
3. அதனுடன் உப்பு, ரசப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொட்டவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.