மிளகுக் காளான் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பட்டர் காளான் – 250 கிராம்
2. பூண்டுப்பல் – 10 எண்ணம்
3. மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி
4. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
5. மல்லித்தழை – சிறிது
6. உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
7. எண்ணெய் – தேவையான அளவு
8. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
9. கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. காளானை நன்கு சுத்தப்படுத்தி நீள வாக்கில் நறுக்கவும்.
2. வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், அதில் நறுக்கி வைத்துள்ள பூண்டைப் போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும்.
5. பிறகு அதனுடன் காளானை சேர்த்து நன்கு கிளறவும்.
6. காளான் வேகும் வரை இடை இடையே கிளறிக் கொண்டே இருக்கவும்.
7. காளான் வெந்ததும் மல்லித்தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.