காளான் டோஸ்ட்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை பிரட் - 4 துண்டுகள்
2. சீஸ் (பாலாடைக் கட்டி) - 2 கட்டிகள்
3. காளான் - 8 எண்ணம்
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. குடைமிளகாய் - 1 எண்ணம்
6. தக்காளி - 1 எண்ணம்
7. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாலாடைக் கட்டியினை (சீஸ்) துருவி வைக்கவும்.
2. காளான், வெங்காயம், குடை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
3. ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் பிரட் துண்டுகளைப் போட்டு, இரண்டு பக்கங்களையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
4. ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காளான் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
5. பின் அதில் உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
6. பின்பு அந்த கலவையை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் மீது வைத்து, அதன்மேல் துருவிய சீஸைத் தூவி, மைக்ரோவேவ் ஓவனில் வைத்து, 2-3 நிமிடம் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.