கத்திரிக்காய் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் -1/2 கிலோ
அரைக்க :
2. சின்ன வெங்காயம் - 7 எண்ணம்
3. பூண்டு -3 பல்
4. தக்காளி (சிறியது) -1 எண்ணம்
5. தனி மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
6. உப்பு - 3/4 தேக்கரண்டி
தாளிக்க:
7. எண்ணெய் -1 மேசைக்கரண்டி
8. சோம்பு -1/2 தேக்கரண்டி
9. உளுந்து -1/2 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. கத்திரிக்காயை நீளவாக்கில் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மேலே குறிப்பிட்டுள்ள அரைக்கும் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிசம் செய்யவும்.
4. நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்கு வதக்கவும்.
5. பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து, வறுத்து எடுக்கவும். வதங்கும் போதே மணம் பிரமாதமாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.