கோபி மஞ்சூரியன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காளி பிளவர் – 1/2 கிலோ
2. அரிசி மாவு – 5 தேக்கரண்டி
3. கார்ன் மாவு – 4 தேக்கரண்டி
4. மிளகுப்பொடி – 1/2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
6. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
8. வெங்காயம் – 1 எண்ணம்
9. குடை மிளகாய் – 1 எண்ணம் (சிறியது)
10. தக்காளி சாஸ் – 4 தேக்கரண்டி
11. சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
12. சிவப்பு மிளகாய் சாஸ் – 2 தேக்கரண்டி
13. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் காளிபிளவர் குக்கரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. பிறகு ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கார்ன் மாவு, மிளகாய்த்தூள், மிளகுப்பொடி ,இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த காளிபிளவர் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
4. அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதனுடன் வெங்காயம், குடை மிளகாய், சோயா சாஸ் , தக்காளி சாஸ் மற்றும் சிவப்பு மிளகாய் சாஸ் சேர்த்துக் கிரேவி ஆகும் வரை மிதமான நெருப்பில் வைக்கவும்.
5. பிறகு அதில் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள காளி பிளவர் போட்டு உப்பு சேர்த்து கிளறி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.