சிறுகிழங்கு கூட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிறுகிழங்கு - 250 கிராம்
2. கடுகு - 1/2 தேக்கரண்டி
3. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. கருவேப்பிலை - சிறிது
அரைக்க
7. தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
8. சோம்பு - 1 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
செய்முறை:
1. சிறுகிழங்கை நன்றாகக் கழுவிக் குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான நெருப்பில் வேக வைத்து எடுக்கவும்.
2. அதன் தோலை நீக்கிச் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
3. அரைக்க கொடுக்கப்பட்டதை விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து கொள்ளவும்.
5. பின் வேக வைத்த சிறுகிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
6. அதன் பிறகு தேங்காய் விழுது சேர்த்து வதக்கி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.