முட்டைக்கோஸ் கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முட்டைக்கோஸ் - 200 கிராம்
2. கடலை பருப்பு - 50 கிராம்
3. பாசிப்பருப்பு - 25 கிராம்
4. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
5. தக்காளி - 1 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
9. பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. பெருங்காயம் - சிறிது
12. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
13. மல்லித்தழை - சிறிது
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. குக்கரில், கடலை பருப்பு , பாசிப்பருப்பு, நறுக்கிய முட்டை கோஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி, உப்பு, அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
3. முட்டைக்கோஸ், பருப்பு கலவை நன்றாக வெந்ததும், அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
4. வாணலியில், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் சேர்த்துத் தாளித்து கொட்டிக் கிளறவும்.
5. கடைசியாக, அதில்மல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.