பீர்க்கங்காய் கடைசல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பீர்க்கங்காய் - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் - 150 கிராம்
3. தக்காளி - 4 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 10 எண்ணம்
5. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
6. கருவெப்பிலை - சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பீர்க்கங்காய், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய அனைத்தையும் ஒரு சட்டியில் போட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
3. வேகவைத்த காய்களைப் பருப்பு கடையும் மத்தால் நன்கு கடைய வேண்டும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு உளுந்து, கருவேப்பிலை போட்டுத் தாளித்து வேகவைத்த பீர்க்கங்காயில் கொட்டிக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.