காளான் மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் – 250 கிராம்
2. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி
5. கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
6. பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
7. தக்காளி – 2 எண்ணம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
8. பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்)
9. இஞ்சிப் பூண்டு விழுது — 1 தேக்கரண்டி
10. உப்பு – தேவையானளவு
11. கறிவேப்பிலை – சிறிது
12. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும் அதில் காளான், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து இரண்டு நிமிடம் அப்படியே விடவும்.
2. ஆறியதும் தண்ணீரை வடித்து, காளானைச் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பின்னர் அதில் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
6. மசாலா வாடை நீங்கியதும் காளானைச் சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கிளறிவிடவும், கெட்டியானதும் அடுப்பை அணைத்து மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.