சிறுகிழங்கு வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிறுகிழங்கு - 1/4 கிலோ
2. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
6. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. சிறுகிழங்கை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மண் போகும் வரை நன்றாகக் கழுவி, தோல் சீவிக்கொள்ளவும்.
2. தோல் சீவியக் கிழங்குகளைப் பொடிதாக வெட்டித் தண்ணீரில் போட்டு வைக்கவும். (கறுத்து போகாமல் இருக்கும்)
3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்து, கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், சிறுகிழங்கு துண்டுகளளுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.
5. கிழங்கு துண்டுகள் பொன்னிறமானதும், அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து இறக்கவும்.
குறிப்பு:
* சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.