சுண்டைக்காய் பச்சடி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சுண்டைக்காய் (பிஞ்சாக) – 1/2 கோப்பை
2. துவரம்பருப்பு – 1/2 கோப்பை
3. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
4. தக்காளி – 3 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
6. புளி – சிறு நெல்லிக்காய் அளவு
7. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு
9. கடுகு – 1/2 தேக்கரண்டி
10. உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
11. சோம்பு – 1/4 தேக்கரண்டி
12. பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
13. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேக வைக்கவும்.
2. புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
3. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
4. பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
5. சுண்டைக்காயை அம்மியில் வைத்துத் தட்டிப் புளித்தண்ணீரில் போட்டு வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
8. வெங்காயம் வதங்கியதும், அத்துடன் சுண்டைக்காயைப் புளித் தண்ணீரிலிருந்து எடுத்துச் சேர்க்கவும்.
9. நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
10. புளித் தண்ணீரையும் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்தப் பிறகு, பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.