பொரிச்ச மிளகாய் சம்பல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. துருவிய தேங்காய்ப்பூ - 2 கப்
2. மிளகாய் வற்றல் - 12 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 50 கிராம்
தாளிக்க
4. வெங்காயம் - 5 எண்ணம்
6. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. காம்பு உடைத்த மிளகாய் வற்றல்களை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும்.
3. பின்னர் தேங்காய்ப்பூவைச் சேர்த்து இடிக்கவும்.
4. கடைசியாக சின்ன வெங்காயத்தை சேர்த்து இடிக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, பெருஞ்சீரகம் சேர்த்துப் பொறிந்தவுடன். வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
6. தாளிசத்தைச் சம்பல் மேல் போட்டுக் கலக்கவும்.
குறிப்பு: உரல் வைத்திருக்காதவர்கள், மிக்சி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.