வாழைத்தண்டு பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வாழைத்தண்டு (சிறு துண்டுகளாக) - 1 கோப்பை
2. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
3. தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
4. தயிர் - 1 கோப்பை
5. எண்ணெய் - தேவையான அளவு
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - சிறிது
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வாழைத்தண்டு, பச்சைமிளகாய், தேங்காய் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து விழுதில் கொட்டி, தயிருடன் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.